கொசுக்களால் உயிரே போகும் அளவிற்கு பரவும் நோய்கள்..!! நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி..?
கேரள மாநிலம் இடுக்கியில் வெஸ்ட் நைல், டெங்கு காய்ச்சல் போன்ற கொசுக்களால் பரவும் நோய்களால் சமீபகாலமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை தொடங்க இன்னும் குறைவான நாட்களே இருப்பதால், கூடுதல் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதாரத்துறை அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது.
WHO பரிந்துரைகள் :
கொசுக்களால் பரவும் நோய்கள் உலக மக்கள் தொகையில் 80% சதவிகிதத்தினருக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்த நோய்கள், கொசுக்கள், ஈக்கள், பூச்சிகள் போன்றவற்றால் பரவுகின்றன. ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான நோய்த்தொற்றுகள் மற்றும் ஏராளமான உயிரிழப்புகள் இதனால் ஏற்படுகின்றன. குறிப்பாக வறுமை நிலையில் உள்ள மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நோய்களை கட்டுப்படுத்த, இரண்டு விஷயங்களை பரிந்துரை செய்கிறது உலக சுகாதார அமைப்பு. ஒன்று, பூச்சிக்கொல்லி வராமல் தடுக்கும் வலைகள் (ITNகள்), இன்னொன்று பூச்சிக்கொல்லி தெளிப்பான் (IRS). கொசு வலைகள் பயன்படுத்தி தூங்குவதால் மலேரியா போன்ற நோய்களின் பரவல் குறைக்கின்றன. கொசுக்கள் மற்றும் பிற நோய் பரப்பும் பூச்சிகளைக் கொல்ல பூச்சிக்கொல்லிகளை வீட்டிற்குள் தெளிக்கலாம்.
வீட்டில் கொசுக்கள் வராமல் இருக்க சில டிப்ஸ் இதோ..!!
* கொசுக்கள் இனப்பெருக்கம் ஆவதை தடுக்க நம் வீட்டில் உள்ள பூந்தொட்டிகள், பறவைகளுக்கான தண்ணீர் கிண்ணம், மற்றும் செல்லப் பிராணிகளுக்கான கிண்ணங்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* அறைக்கு நல்ல காற்றோட்டத்தை உருவாக்க சீலிங் அல்லது போர்டபிள் மின்விசிறிகளைப் பயன்படுத்தலாம்.
* ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் மெல்லிய கம்பி வலைகளை பொறுத்தவும்.
* தோல்களில் EPA-அங்கீகரித்த விரட்டிகளைப் பயன்படுத்தவும். வெளிப்புற பகுதிகளில் கொசு விரட்டும் மெழுகுவர்த்திகள் அல்லது சுருள்களை பயன்படுத்தலாம்.
* இயற்கையாகவே கொசுக்களை விரட்ட உங்கள் வீட்டைச் சுற்றி வெட்டிவேர், லாவெண்டர், சாமந்தி, துளசி, ரோஸ்மேரி போன்ற செடிகளை வளர்க்கலாம்.
Read More : 11ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு..!! இன்று முதல் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்யலாம்..!!