எழுமிச்சை ஜூஸ் அடிக்கடி குடிக்கிறீங்களா.? உங்களுக்கு தான் இந்த பதிவு.!
செரிமானத்திற்காகவும், உடல் குளிர்ச்சிக்காகவும் பலர் அடிக்கடி எலுமிச்சை ஜூஸை குடித்து வருகின்றனர். ஆனால் இவ்வாறு தொடர்ந்து குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுவாக சாப்பாட்டிற்கு பின்பு எலுமிச்சை ஜூஸ் குடிப்பது செரிமானத்தை ஏற்படுத்தும். வைட்டமின் சி சத்து அதிகமாக காணப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் இரும்பு சத்தை அதிகப்படுத்துகிறது.
இவ்வாறு உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து தேவையான அளவை விட அதிகமாக கிடைக்கும் போது உடலில் இருக்கும் இரும்புச்சத்தை அதிகப்படுத்தி முக்கிய உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் எலுமிச்சை ஜூசை அதிகமாக குடிக்கும் போது நெஞ்செரிச்சல், வயிற்று புண் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
மேலும் அல்சர், உணவுக் குழாய் ரிப்லக்ஸ் போன்ற நோய் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை ஜூசை கண்டிப்பாக குடிக்க கூடாது. இவ்வாறு உடலுக்கு பல நன்மைகளை தரும் எலுமிச்சை ஜூசை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதானால் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகப்படுத்தி உடலில் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளது.