Lifestyle: எப்போதும் உடல் சோர்வாகவும் மயக்கமாகவும் உள்ளதா.! இந்த வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்.!?
Lifestyle: பொதுவாக உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் சீரான அளவில் உடலுக்கு கிடைத்தால் தான் நம் உடலால் நோய் நொடி இல்லாமலும், சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும். இவற்றில் ஒரு சில வைட்டமின்கள் நம் உடலுக்கு கிடைக்காமல் போனால் இதன் மூலம் பல்வேறு வகையான நோய்கள் நம் உடலை பாதிக்கும். குறிப்பாக வைட்டமின் பி12 ஊட்டச்சத்து நம் உடலில் கிடைக்காமல் போனால் என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பதை குறித்து இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்?
1. உடலில் வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை எனில், ரத்தசோகை அதிகரிக்கும். இதனால் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனை அதிகமாக உறிஞ்ச முயற்சி செய்யும். இதனால் மூச்சு விட சிரமம் ஏற்படும். மேலும் உடல் சோர்வு, திடீர் மயக்கம், பலவீனம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
2. மூளையிலிருந்து பல்வேறு ஆற்றல்களையும், செயல் திறன்களையும் உடலுக்கு கடத்துவதில் நரம்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்புகளுக்கு வைட்டமின் பி12 சத்து முக்கிய தேவையானதாக இருந்து வருகிறது. இந்த வைட்டமின் பி12 சத்து கிடைக்கவில்லை எனில் நரம்புகள் சீராக செயல்படாது. இதனால் கை மற்றும் கால்களில் வலி, கூச்ச உணர்வு, நினைவாற்றல் குறைவு, நடப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
3. மூளைக்கு தேவையான வைட்டமின் பி12 சத்துக்கள் கிடைக்கவில்லை எனில் நினைவாற்றல் பாதிக்கப்பட்டு நியாபக மறதி ஏற்படுகிறது.
4. உடலில் வைட்டமின் பி 12 அளவு குறைவாக இருக்கும் போது இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத்திற்கு தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்வதற்கு ரத்த நாளங்கள் மிகவும் சிரமப்படும். இதனால் மாரடைப்பு போன்றவை ஏற்படலாம்.
சிறிய பாதிப்புகளில் இருந்து பெரும் நோய்கள் வரை இந்த வைட்டமின் பி12 ஊட்டச்சத்து குறைபாடினால் ஏற்படுகின்றது.
மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதும் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து வைட்டமின் பி 12 ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா என்பதற்கான பரிசோதனை மேற்கொண்டு அதற்குரிய மருத்துவங்கள் செய்து கொள்ள வேண்டும் என்று சென்னையில் உள்ள நியூபெர்க் டயக்னோஸ்டிக்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் ப்ரீத்தி காப்ரா விளக்கம் அளித்துள்ளார்.