முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிறந்த குழந்தைகளுக்கு உதட்டோடு முத்தம் கொடுக்கறீங்களா.! இனி கண்டிப்பாக இதை செய்யாதீங்க.!?

05:55 AM Jan 24, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக குழந்தைகளை பார்த்தாலே அல்லது அவர்கள் செய்யும் அழகான குறும்புகளை பார்க்கும் போதோ அப்படியே அள்ளி அணைத்து முத்தம் தர தோணும். ஆனால் பெற்றவர்களோ அல்லது மற்றவர்களோ குழந்தைகளுக்கு முத்தம் தரும்போது வாய் வைத்து கன்னத்திலோ உதட்டிலோ முத்தம் கொடுக்கக் கூடாது. இவ்வாறு தருவது குழந்தைகளுக்கு பல நோய்களை ஏற்படுத்தும் என்ற மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement

அதாவது குழந்தைகள் பிறந்ததிலிருந்து ஒரு குறிப்பிட்ட வயது வரை நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும். அப்படி இருக்கும் வகையில் குழந்தைகளுக்கு நம்முடைய உதடு வைத்து முத்தம் கொடுக்கும்போது தோல் அலர்ஜி, புண்கள், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவான குழந்தைகளை பெருமளவு பாதிக்கிறது.

மேலும் குழந்தைகளின் உதட்டோடு நம் உதட்டை வைத்து முத்தம் கொடுக்கும் போது கிருமிகள் குழந்தைகளின் உடலுக்குள் சென்று பல்வேறு வகையான நோய் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இவ்வாறு முத்தம் கொடுப்பது குழந்தைகளுக்கு ஹெர்பெஸ் சிமப்ளக்ஸ் (HSV-1) வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

Tags :
babyInfectionKiss
Advertisement
Next Article