இந்த நோய்கள் இருப்பவர்கள் கத்தரிக்காயை மறந்தும் கூட சாப்பிடாதீங்க.!
பொதுவாக காய்கறிகள் என்றாலே பல்வேறு நன்மைகளை உடலுக்கு தந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. அடிக்கடி உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகவும் இருக்கிறது. ஆனால் ஒரு சில காய்கறிகளை குறிப்பிட்ட நோயுடையவர்கள் சாப்பிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றன.
குறிப்பாக கத்திரிக்காய் ஒரு சில நோயுடையவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. எல்லா காலங்களிலும் சாதாரணமாக கிடைக்கும் கத்திரிக்காய் மிகவும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. எடையை குறைக்க விரும்புபவர்கள் கத்திரிக்காயை தினமும் எடுத்துக் கொள்ளலாம். மேலும் இரத்த சர்க்கரை அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய கத்திரிக்காயை யார் யார் சாப்பிடக்கூடாது தெரியுமா?
1. பித்தப்பை கல், சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் கத்திரிக்காயை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கத்திரிக்காயில் ஆக்சலேட் என்ற ஊட்டச்சத்து இருப்பதால் இது வயிற்றில் பிரச்சனையை அதிகரிக்கும்.
2. இரும்பு சத்து குறைபாடு, ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் கத்திரிக்காயை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. இது மேலும் குறைபாட்டை அதிகரிக்கும்.
3. உடலில் அரிப்பு, அலர்ஜி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காயை எடுத்துக் கொண்டால் அலர்ஜி மற்றும் அரிப்பை அதிகப்படுத்தி விடும்.
4. மலச்சிக்கல் மற்றும் வயிறு வலி போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது.
5. கண் எரிச்சல், கண் அழுத்தம், கண்ணில் இருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சனையுடையவர்கள் கத்திரிக்காயை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது இது மேலும் பிரச்சனையை அதிகப்படுத்தும் என்ற ஆயுர்வேத மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
6. அறுவை சிகிச்சை செய்தவர்கள் மூன்று மாதத்திற்கு கத்திரிக்காயை எடுத்துக் கொள்ளக் கூடாது. இது அறுவை சிகிச்சை செய்த இடத்தில் அரிப்பை அதிகப்படுத்தும்.