For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பள்ளிகள் திறந்ததும் இந்த தவறை செய்தால் நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை..!! மாணவர்கள் நிம்மதி..!!

Disciplinary action has also been taken against the conductors if they let students in uniform or holding identity cards off the bus.
07:17 AM May 29, 2024 IST | Chella
பள்ளிகள் திறந்ததும் இந்த தவறை செய்தால் நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை     மாணவர்கள் நிம்மதி
Advertisement

சீருடையில் உள்ள மாணவர்களை அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால், நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பேருந்துகளில் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான புதிய பேருந்து பயண அட்டைக்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டு அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இதற்கிடையே, வரும் 6ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே, போக்குவரத்துத் துறையால் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கும் வரை அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பழைய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம்.

இதே நடைமுறை தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட மாணவர்களுக்கும் பொருந்தும். இது தொடர்பாக நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை மீறி சீருடையில் உள்ள மாணவர்களை அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால், நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read More : இதை நம் உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் ஆபத்தா..? மருத்துவர்கள் சொல்வது என்ன..?

Tags :
Advertisement