2025-ல் நடக்கப்போகும் பேரழிவுகள்!. ஒரே மாதிரி கணித்த பாபா வங்கா-நாஸ்ட்ராடாமஸ்!. அதிர்ச்சியில் உலக நாடுகள்!
Baba Vanga-Nostradamus: வரலாற்றில் பலரும் எதிர்காலத்தைக் கணிக்கும் திறன் தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர், அவர்கள் மனிதகுலத்திற்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி பல்வேறு கணிப்புகளைக் கூறியுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவர்கள் போலியானவர்களாக இருந்தாலும் சிலர் துல்லியமான கணிப்புகள் மூலம் உலகத்தை ஆச்சரியப்படுத்திய சிலரும் வரலாற்றில் இருந்துள்ளனர்.
இவர்களில் பார்வையற்ற பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த தனது பல கணிப்புகள் மூலம் தனித்து நிற்கிறார். அவரது தீர்க்கதரிசனங்கள் ஆர்வத்தையும் விவாதத்தையும் தூண்டிக்கொண்டே இருப்பதால், அவரது கணிப்புகள் எப்போதும் மக்களின் எதிர்பார்ப்புகள் இருந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக அவரது கணிப்புகள் நெருங்கும் ஆண்டுகள் வரும்போது அதனைப் பற்றிய விவாதங்கள் அதிகரிக்கிறது. இதேபோல், நாஸ்ட்ராடாமஸ் என்பவரும் விசித்திரமான கணிப்புகளுக்கு பெயர் பெற்றவர். இவர்களது கணிப்புகள் ஆண்டுதோறும் உண்மையாகி வருகின்றன.
இப்போது, 2025 ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் நிலையில், வரவிருக்கும் ஆண்டை அவர்கள் கணித்தவை மீண்டும் வைரலாகி வருகின்றன. இந்த பழம்பெரும் தீர்க்கதரிசிகள் 2025 ஆம் ஆண்டில் ஏற்படும் பேரழிவு குறித்து கணித்துள்ளனர். அதாவது, 2025 ஆம் ஆண்டில் உலகத்தின் மக்கள்தொகையை "குறைக்கும்" ஐரோப்பாவில் நடக்கப்போகும் ஒரு பெரிய மோதலையும் வங்கா கணித்துள்ளார், தற்போதைய உலகின் சூழலை பார்க்கும் போது இது நடக்க வாய்ப்புள்ளது என்று பலரும் அஞ்சுகின்றனர்.
இந்த மோதல் 2025 ஆம் ஆண்டில் கண்டத்தை "பேரழிக்கும்" என்று அவர் கூறியிருந்தார். 2025 இல் நடக்கும் நிகழ்வுகள் உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று வங்கா கூறியதாக கூறப்படுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, இரு நாடுகளுக்கு இடையே 2025 இல் ஒரு புதிய போர் வெடிக்கும் என்று அவர் நம்பினார்,
பாபா வங்கா, 9/11 பயங்கரவாத தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் பேரழிவு மற்றும் பிரெக்ஸிட் போன்ற சில முக்கிய உலக நிகழ்வுகளை முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது. மறுபுறம், நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பண்டைய பிரெஞ்சு ஜோதிடரான Michel de Nostredame பல துல்லியமான கணிப்புகளையும் செய்துள்ளார்.
Readmore: 55 கீ.மீ. வேகத்தில் பலத்த காற்று… மீனவர்கள் யாரும் கடலுக்கு போக வேண்டாம்…! வானிலை மையம் எச்சரிக்கை