அடுத்தடுத்து ஏமாற்றம் அளிக்கும் வீரர்கள்!. தங்க மகனுக்காக காத்திருக்கும் இந்தியா!. பலத்த எதிர்பார்ப்பு!
Neeraj Chopra: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில் இன்றைய ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், 100 கிராம் எடை அதிகரித்ததாக கூறி அவரை ஒலிம்பிக் சம்மேளனம் தகுதி நீக்கம் செய்தது. வினேஷ் போகட் இறுதிப்போட்டி வரை வந்துள்ளதால் அவருக்கு வெள்ளி பதக்கம் ஆவது கொடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், ஒலிம்பிக் தொடரின் 13 வது நாளான இன்று (ஆகஸ்ட் 8) இந்தியாவே எதிர்பார்க்கும் முக்கிய போட்டி ஒன்று நடைபெற உள்ளது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா பங்கேற்க உள்ளார். அவர் தங்கப் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்து இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளது. இந்த இரண்டு போட்டிகளுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதை தவிர கோல்ஃப், ஓட்டப் பந்தயம், மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த தொடரில் இந்தியா இதுவரை மூன்று வெண்கல பதக்கம் மட்டுமே வாங்கி இருக்கிறது. ஆனால் பல விளையாட்டு பிரிவுகளில் நான்காவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறது. இதனிடையே இந்திய நிரப்படி இரவு 1 .20 மணிக்கு நடைபெற்ற 3000 மீட்டர் ஸ்டேப்லீசேஸ் பிரிவில் இந்திய வீரர் அபிலாஷ் 11-வது இடத்தை பிடித்து தோல்வியை தழுவினார். ஆகஸ்ட் எட்டாம் தேதியான இன்று இந்தியாவுக்கு மிகவும் முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது. தினேஷ் போகட் மேல் முறையீடு, மாலை ஹாக்கி வெண்கல பதக்கத்திற்கான போட்டி மற்றும் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்க பதக்கத்திற்கான போட்டி நடைபெற இருக்கிறது.
Readmore: சொந்த வீடு கட்ட போறீங்களா..? இந்த பரிகாரத்தை செய்தால் நல்லதே நடக்கும்..!!