கேப்டன் ஜோஸ் பட்லருடன் கருத்து வேறுபாடு!. வெளியேறிய கோச் ஆன்ட்ரு ஃபிளின்டாப்!.
Jos Buttler: இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லருடனான கருத்துவேறுபாடு காரணமாக குறுகிய கால ஆலோசகரும் பயிற்சியாளர் குழுவில் ஒரு பகுதியாக இருக்கும் ஆண்ட்ரூ பிளின்டாஃப், அணியில் இருந்து பிரிந்து செல்கிறார்.
2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் மற்றும் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் இரண்டிலும் இங்கிலாந்து அணி மோசமாக தோல்வி அடைந்த காரணத்தினால் இங்கிலாந்து வெள்ளை பந்து அணிகளின் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது தற்காலிகமாக இங்கிலாந்து பயிற்சியாளர் குழுவில் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஆண்ட்ரூ ஃபிளின்டாப் இணைக்கப்பட்டார். இந்த நிலையில் செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரையில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது.
இப்படியான நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் ஆண்ட்ரூ ஃபிளின்டாப் இடையே கருத்து வேற்றுமைகள் உருவாகி இருக்கிறது. இது பெரிய அளவில் மாறிய காரணத்தினால், தற்போது அவர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்து வெளியேறிவிட்டார் என இங்கிலாந்து பெரிய பத்திரிக்கையில் செய்தி வெளியாகியிருக்கிறது.
முன்னாள் இங்கிலாந்து தொடக்க வீரரான மார்கோ ட்ரஸ்கோதிக் இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் பயிற்சியாளர் குழுவில் முக்கிய பொறுப்புக்கு கொண்டு வருவார் என்று கூறப்படுகிறது. இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் போது இதை அவரும் ஏற்றுக் கொண்டு பேசியிருக்கிறார். இதுகுறித்து மார்கோ ட்ரஸ்கோதிக் கூறும்பொழுது “நான் இந்த புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயல்படுவதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.
நான் அங்கிருந்து இன்னும் கொஞ்சம் வேலைகளை செய்யப் போகிறேன்.இப்போது எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் வரையில், நான் முன்பு நினைத்தது போல் எதுவும் இல்லை. ஆஸ்திரேலியா தொடரை விட நான் எதையும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் இங்கு செய்யும் வேலைகள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்” என்று கூறி இருக்கிறார்.