அதிக நேரம் போன் யூஸ் பண்றீங்களா? ஆராய்ச்சியில் வெளியான அதிர்ச்சி தகவல்!!! உடனே இதை படியுங்க..
தற்போது உள்ள காலகட்டத்தில், பலர் நேரம் காலம் தெரியாமல் எப்போதும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அத்தனை மணி நேரம் செலவழித்தும் எந்த பிரயோஜனமும் இருப்பதில்லை. சமூக ஊடகங்களில் பயனற்ற ஒன்றில் மூழ்கி இருப்பது பலருக்கு வழக்கம் ஆகிவிட்டது. இப்படி, ஒன்றுக்கும் பயன் இல்லாத சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவு செய்பவர்களை குறிப்பிடும் வார்த்தையே மூளை அழுகல் அல்லது ‘Brain Rot என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, ஆக்ஸ்ஃபொர்டு பல்கலைக்கழகம், சமூக வலைத்தளங்களில் அதிகம் புழங்கும் சொற்களை Word of the Year ஆக தேர்வு செய்யும். அந்த வகையில் இந்த ஆண்டின் வார்த்தையாக மூளை அழுகல் அல்லது ‘Brain Rot’ என்று குறிப்பிட்டுள்ளது.
‘Brain Rot’ என்னும் வார்த்தை, 1854 ஆம் ஆண்டு அமெரிக்க தத்துவவியலாளர் ஹென்றி டேவிட் தோரோ என்பவரால் பயன்படுத்தப்பட்டது. 2023 - 2024 ஆண்டில் இந்த வார்த்தையின் பயன்பாடு 230% அதிகரித்திருப்பதாக ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி தெரிவித்துள்ளது. இணையதளத்தில் பயனற்ற வீடியோக்களை பார்ப்பதால் உண்டாகும் தீமைகள் குறித்து பேசும் போது தான் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, நீண்ட நேரம் தூங்கினாலும் அல்லது சிறிய தூக்கத்துக்கு பிறகும் ஒருவகையான மூடுபனி உணர்வு ஏற்படும். அந்த சமையத்தில், நம்மால் எதிலும் கவனம் செலுத்த முடியாது. அதே போன்று நீண்ட நேரம் திரைகளை பயன்படுத்துவது டிஜிட்டல் தகவல் சுமையை ஏற்படுத்தும். இதனால் மூளை அழுகல் நிலையை உண்டு செய்து மன ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.
அதாவது, ஆன்லைனில் பயனற்ற தகவல்களை நீண்ட நேரம் பார்க்கும் போது, மூளையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்திவிடும். சமூக ஊடகங்களை ஸ்க்ரோலிங் செய்வது, மாறி மாறி குறுஞ்செய்தி அனுப்புவது, யூடியூப்பில் அதிக வீடியோக்களை பார்ப்பது போன்ற காரியங்கள் சாதாரணமாக தோன்றலாம். ஆனால், இவ்வாறு செய்வதால், நரம்பியல் வேதியியல் டோபமைன் அதிகரித்து, மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும். அதாவது இது ஒரு வகையான போதையாக மாறிவிடும்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், Doomscrolling ( நீண்ட நேரம் நெகட்டிவான வீடியோ மற்றும் செய்திகளை பார்ப்பது) செய்வது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் அடிமையாக இருப்பதால், மூளை குழப்பமடைந்து உண்மையை கண்டறிய போராடுகிறது. இதனால் முடிந்த வரை செல்போனில் நேரம் செலவு செய்வதை தவிர்த்து விட்டு, சற்று வெளியே நண்பர்களுடன் சென்று வாருங்கள்.. அல்லது வீட்டை சுத்தம் செய்வது, நண்பர்களுடன் பேசுவது போன்ற செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொளுங்கள்.
Read more: ஸ்வெட்டர், சாக்ஸ் அணிந்து தூங்கவே கூடாது… ஏன் தெரியுமா? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..