கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தாகும் நெயில் பாலிஷ்.. என்ன காரணம் தெரியுமா..?
பொதுவாக உடலுக்கு பெண்கள் பலரும் பல்வேறு அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தி வருகிறார்கள். முகத்தை அழகுபடுத்துவது போலவே தங்கள் கைகளையும் அழகுபடுத்த நகங்களில் நெயில் பாலிஷ் உபயோகப்படுத்துகிறார்கள். இது எந்த அளவில் உடலுக்கு தீமையை ஏற்படுத்துகிறது என்பதை குறித்து பார்க்கலாம்
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கைகளில் நெயில் பாலிஷ் போட்டுக்கொள்ளும் போது அது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெயில் பாலிசியில் உள்ள இரசாயனங்கள் நம் உடலில் கலந்து தாயின் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் ஒரு சிலர் குழந்தைகளுக்கும் நெயில் பாலிஷ் போடு்கின்றனர். குழந்தைகள் கையை வாயில் வைக்கும் போது அதில் உள்ள கேடு விளைவிக்கும் ரசாயனமான பார்மாலிடிகிடு, டிபூட்டல் பத்தாலேட் போன்றவை உடலில் கலந்து பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது.
இதன்படி தலைவலி, நுரையீரல் பாதிப்பு, புற்று நோய் பாதிப்பு, நகம் நிறம் மாறுதல், சுவாச கோளாறு போன்ற பல்வேறு பாதிப்புகள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்படும். குறிப்பாக இதில் உள்ள பார்மாலிடிகைட் ரசாயனம் மூளையை பாதித்து மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது.