For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அழுக்கு படிந்த கேஸ் பர்னர்!! 5 நிமிடத்தில் பளிச்சுனு புதிதுபோல மாற்ற டிப்ஸ் இதோ!!

06:30 AM May 18, 2024 IST | Baskar
அழுக்கு படிந்த கேஸ் பர்னர்   5 நிமிடத்தில் பளிச்சுனு புதிதுபோல மாற்ற டிப்ஸ் இதோ
Advertisement

கேஸ் ஸ்டவ் இல்லாத வீடுகளே கிடையாது. ஆனால் அதை சுத்தம் செய்வது தான் மிகப்பெரிய வேலை. சமைக்கும்போது சிதறும் எண்ணெய், பொங்கி வழியும் பால், போன்றவை கொட்டி, கொட்டி அந்த பர்னரே நாசமாகிவிடும். அதில் அழுக்குகள் அடைத்துகொண்டு சரியாக எரியவும் செய்யாது. இந்த பர்னரை சுத்தம் செய்வது மிகப்பெரிய காரியம் தான். ஆனால் அந்த கேஸ் பர்னரை எப்படி ஒரு நிமிடத்தில் சுத்தம் செய்யலாம்

Advertisement

இந்த பொருட்கள் இருந்தாலே போதும்!

கேஸ் பர்னரில் அடைப்பு ஏற்படும்போது அதை சரிசெய்ய இயற்கையான வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.வீட்டிலுள்ள இயற்கை பொருள்களை பயன்படுத்தி மாதம் ஒரு முறை சுத்தம் செய்தாலே போதுமானது.எளிமையான ஐந்தே நிமிடத்தில் எப்படி கேஸ் பர்னரை சுத்தம் செய்யலாம்.
கேஸ் பர்னரை கழட்டி அதை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டுக் கொள்ள வேண்டும். அதில் ஒரு சிறிய கப் அளவுக்கு அமுானியாவை சேர்த்து கவரை நன்கு கட்டி இரவு முழுக்க அப்படியு வைத்து விட வேண்டும். அடுத்த நாள் காலையில் எடுத்துப் பார்த்தால் பர்னர் பளிச்சென்று புதுசு போல இருக்கும் தண்ணீரில் கழுவி வெயிலில் காய வைத்து எடுத்து பயன்படுத்துங்கள்.

மேலும், பேக்கிங் சோடாவுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து நன்கு கறை படிந்த பர்னரை தேய்க்க வேண்டும். அப்படி தேய்த்து பின் வெந்நீரில் போட்டு ஊற விட்டு கழுவினால் பர்னர் பளிச்சென்று மாறிவிடும். ஒயிட் வினிகரில் அரை மணி நேரம் வரை ஊறவைத்து பின் அதை நன்கு ஸ்கிரப்பர் கொண்டு தேய்த்து எடுத்தால் பர்னரில் இருக்கும் கறைகள் முழுக்க நீங்கி புதுசு போல இருக்கும்.
நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் டிஸ்வாஷ் லிக்விடுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு பர்னரை தேய்த்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தாலும் பர்னர் சுத்தமாகிவடும்.

Read More: ’மோகன்லால் என் வீட்டு கிச்சன் வரைக்கும் வந்து’..!! ’இப்போ அவரு மேல மரியாதையே இல்ல’..!! நடிகை சாந்தி பகீர் தகவல்..!!

Advertisement