நீங்கதான் சென்னைக்கு அட்ரஸ்னா.. அப்போ நாங்க யாருடா!! - ரஞ்சித் பேச்சுக்கு மோகன் ஜி பதிலடி!!
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து நடைபெற்ற பேரணியில் பேசிய பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு இயக்குனர் மோகன் ஜி சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் தளத்தில் விமர்த்தித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்துக்கு நீதி கேட்டு, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள், நேர்மையான முறையில் வழக்கை விசாரிக்க வேண்டும் என பதாகைகள் மூலமாகவும், முழக்கங்களை எழுப்பியும் வலியுறுத்தினர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நினைவேந்தல் பேரணி நடத்திய இயக்குனர் ரஞ்சித் நேற்று பேசியபோது, ‘ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி என்று சமூக வலைதளங்களில் எழுதியவர்கள் அயோக்கியர்கள். அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ரவுடி என்று சொல்வீர்களா? அப்படி சொன்னால் நாங்கள் ரவுடிகள் தான். இந்த படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நினைக்காதீர்கள். இது ஒரு எச்சரிக்கை. ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று ஆவேசமாக பா ரஞ்சித் பேசினார்.
மேலும், தொடர்ந்து பேசிய இயக்குனர் பா ரஞ்சித், மெட்ராஸ் எங்களுடைய கோட்டை. சென்னையில் வாழும் 40% மேற்பட்டோர் தலித்துகள் தான். சேரிகளின் வாக்குகளை பெற்று தான் கோட்டையை அடைந்துள்ளீர்கள். அநீதிக்கு எதிராக போராடினால் ரவுடிகள் என்றால் நாங்கள் ரவுடிகள் தான் என்று இயக்குனர் பா.ரஞ்சித் உணர்ச்சிவசமாக பேசி இருந்தார்.
இந்த நிலையில், இது குறித்து பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி , ருத்ர தாண்டவம், பாகாசுரன் ஆகிய படங்களின் இயக்குனரான மோகன்ஜி இது குறித்து சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில், " என்னங்கடா இது. சினிமால வர்ற டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க.. எப்ப பார்த்தாலும் ரவுடி நாங்க தான், பத்து கேஸ் வாங்க போறது நாங்க தான், மெட்ராஸ் நாங்க தான்னு கூவுறீங்க.. நாங்க எல்லாம் யாருதான்டா அப்ப சென்னையில.. அடுத்தவன் வரலாற சினிமால மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்ப மேடையில வேற " என்று இவ்வாறு கடுமையாக இயக்குனர் பா ரஞ்சித்து பதிலடி கொடுத்திருந்தார்.
Read more ; மருத்துவ செலவுக்கு 5 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம் பற்றி தெரியுமா? எப்படி பெறுவது?