முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..!! தேர்வு கிடையாது..!! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை..!!

Tamil Nadu Government Transport Corporation has released a job notification for Graduate, Engineering and Diploma Graduates.
08:51 AM Oct 03, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம், கோவை, சென்னை, சேலம், நெல்லை ஆகிய மண்டலங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மொத்தம் 499 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பதாரர்கள் 21.10.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஜினியரிங் (Apprentices) - 201: மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - 170, சிவில் இன்ஜினியரிங் - 10, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் - 12, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 9.

டிப்ளமோ (Diploma) - 140: மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் - 125,, சிவில் - 5, கணினி அறிவியல் - 7, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 3.

பட்டதாரி பயிற்சி (Graduate) - 158: கோவை - 93, நெல்லை - 53, சென்னை - 22

வயதை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 18 வயது நிறைவடைந்தவராகவும், 29 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். வயது வரம்பில் அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு.

சம்பளம் எவ்வளவு..? தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் என்ஜினியரிங் உள்ளிட்ட டிகிரி பிரிவு பணிகளுக்கு மாதந்தோறும் ரூ.9,000, டிப்ளமோ கல்வி தகுதி கொண்ட பயிற்சி பணிக்கு ரூ.8,000 வழங்கப்படும்.

தேர்வு எதுவும் கிடையாது. மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமும் கிடையாது.

விண்ணப்பிப்பது எப்படி..? ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்கும் முறை, நிபந்தனைகள் உள்பட அனைத்து விவரங்களையும் தேர்வர்கள் இந்த அறிவிப்பில் http://boat-srp.com/wp-content/uploads/2024/09/TNSTC_REGION_NOTIFIATION.pdf தெரிந்து கொள்ளலாம்.

Read More : ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! ரூ.20,000 வரை பணம்..!! தமிழ்நாடு அரசு அட்டகாசமான அறிவிப்பு..!!

Tags :
அரசு வேலைடிப்ளமோதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article