முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இரவு டின்னர்..!! அமலாபாலை படுக்கைக்கு அழைத்த மேனேஜர்..!! அடித்து துவைத்த பரபரப்பு சம்பவம்..!!

Actor Vishal recently gave an interview to a private news agency about the sexual harassment of actress Amala Paul.
11:45 AM Sep 03, 2024 IST | Chella
Advertisement

நடிகை அமலா பாலுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து நடிகர் விஷால், அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ”நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக கூறும் குற்றச்சாட்டு தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை அமலா பால் மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த நிகழ்ச்சியின் மேனேஜர், அமலாவிடம் இரவு டின்னருக்கு வந்துவிடு என்று மறைமுகமாக படுக்கைக்கு அழைத்துள்ளார்.

Advertisement

இதைக்கேட்டு கொந்தளித்த அமலாபால், அவரை அங்கேயே அடித்து துவைத்து, ஒரு வழிபடுத்தி விட்டார். இதையடுத்து, என்னை தொடர்பு கொண்ட அமலாபால், நடந்த சம்பவத்தை விவரித்தார். உடனடியாக நான் கார்த்திக்கிற்கு போன் செய்து, அந்த மேனேஜரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகளை செய்தோம். அப்படியான உடனடி நடவடிக்கை தான் இங்கு தேவைப்படுகிறது.

முதலில் உங்களிடம் யாராவது அப்படி தவறாக நடந்து கொண்டால், செருப்பை கழற்றி அடியுங்கள். தற்போது புதிதாக திரைத்துறைக்கு வரும் பெண்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். உங்களுக்கு என்ன மாதிரியான பாலியல் தொல்லைகள் இருந்தாலும் என்னிடம் வந்து முதலில் சொல்லுங்கள். பயப்பட வேண்டாம்" என்று பேசினார்.

மேலும் திரைத்துறையில் கலைஞர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசிய விஷால், ”அந்த விஷயத்தில் சில பெண்கள் அப்போது தங்களை படுக்கைக்கு அழைத்தவர்களுடன் இணங்கிச் சென்று விட்டு, பின்னாளில் ஏதாவது ஒரு சம்பவத்தில் அவர்கள் மீது கோபமோ, வெறுப்போ ஏற்படும் போது, அதை பாலியல் குற்றச்சாட்டாக மாற்றுகின்றனர். ஒருவரின் பெயரை நீங்கள் கெடுக்க வேண்டுமென்றால், அவர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை வைத்தால் போதும். அது பற்றிக் கொண்டு எரியும். அந்த விவகாரத்தில் என்ன நடந்தாலும், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாகவேச் செல்லும். நாம் ஆம்பளையாக அது குறித்து பேசும் பொழுது, யாரும் நம்மை நம்ப மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

Read More : மக்களே உஷார்..!! கிலோ கணக்கில் காலாவதியான நூடுல்ஸ்..!! அமைச்சர் சொன்ன ஷாக்கிங் தகவல்..!!

Tags :
அமலாபால்நடிகர் விஷால்பாலியல் தொல்லைகள்
Advertisement
Next Article