For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பழனி முருகன் கோயிலில் வேலை.. 296 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

Govt job notification for 296 vacancies in Palani Temple... Here is how to apply
12:18 PM Dec 11, 2024 IST | Mari Thangam
பழனி முருகன் கோயிலில் வேலை     296 பணியிடங்கள்   விண்ணப்பிப்பது எப்படி
Advertisement

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் உப கோயில்களில் உதவியாளர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

காலிபணியிடங்கள் ; மொத்தம் 296 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலி பணியிடங்கள் :

இளநிலை உதவியாளர் – 7, சீட்டு விற்பனையாளர் – 13, சத்திரம் காப்பாளர் – 16, சுகாதார மேஸ்திரி – 4, பூஜை – 1, காவல் – 44, துப்புரவு பணியாளர் – 161, கால்நடை பராமரிப்பு – 2, உதவி யானை மாவுத்தர் – 1, சுகாதார ஆய்வாளர் – 1, உதவிப் பொறியாளர் (மின்னணுவியல்) – 1, உதவிப் பொறியாளர் (சிவில்) – 4, இளநிலை பொறியாளர் (மின்) – 1, இளநிலை பொறியாளர் (ஆட்டோ மொபைல்) – 1, இளநிலை பொறியாளர் (மெக்ட்ரானிக்ஸ் ரோபாட்டிக்ஸ்) 1, மேற்பார்வையாளர் (சிவில்) – 3, மேற்பார்வையாளர் (இயந்திரவியல்) – 3, தொழில்நுட்ப உதவியாளர் (மின்) – 2, தொழில்நுட்ப உதவியாளர் (DECE) – 1, தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்) – 1, கணினி இயக்குபவர் – 3, ஆய்வக நுட்புனர் – 1, வின்ச் ஆப்ரேட்டர் – 1, மிசின் ஆப்ரேட்டர் – 1, மெசின் ஆப்ரேட்டர் – 1, ஹெல்பர் – 2, HT ஆப்ரேட்டர் – 1, ஓட்டுநர் – 2, ஆகம ஆசிரியர் – 1, அத்யானப்பட்டர் – 1, அர்ச்சகர் – 2, நாதஸ்வரம் – 2, தவில் – 2, தாளம் – 5
மாலைகட்டி – 1

கல்வித் தகுதிகள் : தொழில்நுட்ப பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களுக்கு அதற்குரிய தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். பிறப் பணியிடங்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் அனைவருமே 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் தபால் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பும் முகவரி : இணைத்து இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி, திண்டுக்கல் – 624601. இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.01.2025

Read more ; எமனுக்காக ஏற்றப்படும் ”பரணி தீபம்”..!! நீங்கள் செய்த பாவங்கள் போக்க வீட்டில் நாளை இப்படி விளக்கேற்றுங்கள்..!!

Tags :
Advertisement