’இப்படி ஒரு காட்சியை எடுக்கவே தில்லு வேணும்’..!! வைரலாகும் 'ரமணா’ பட சீன்..!!
கேப்டன் விஜயகாந்த் இன்று காலை மரணமடைந்த நிலையில், அவரை பற்றிய பல தகவல்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்து வெளியான திரைப்படம் 'ரமணா'. இந்த படத்தில், விஜயகாந்த் ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். அதேபோல் பிரபல பாலிவுட் நடிகை ஆஷிமா பாலா மற்றொரு நாயகியாக நடித்திருந்தார். 100 நாட்களுக்கு மேல் ஓடிய இந்த படத்தில், அந்த மருத்துவமனை காட்சி தான் செம்ம ஹை லைட்.
அரசு மருத்துவமனையில் உயிரிழந்து, இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட பிணத்திற்கு அரசு மருத்துவமனையில் பல மணி நேரம் சிகிச்சை அளித்து, பின்னர் இறந்து விட்டதாக கூறுவார்கள். இந்த காட்சிக்கு அந்த சமயத்தில் பல தனியார் மருத்துவமனைகள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த குறிப்பிட்ட காட்சியை சமூக வலைத்தளத்தில் விஜயகாந்தின் ரசிகர்கள் வெளியிட்டு, இப்படி ஒரு காட்சியை வைப்பதற்கே செம தில்லு வேணும், அது கேப்டனுக்கு இருந்தது என கூறி வருகின்றனர்.