Lok Sabha 2024 | பெண்கள் குறித்த அவதூறு பேச்சு.!!சுப்ரியா ஷிரினேட், திலீப் கோஷ்-க்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.!!
மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜக கட்சியின் பாராளுமன்ற வேட்பாளரும் நடிகையுமான கங்கணா அற நாவத் ஆகியோருக்கு எதிராக ஆபாசமான மற்றும் அருவருக்கத்தக்க கருத்துக்களை கூறியதால் பாஜக எம்பி திலிப் கோஷ் மற்றும் காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷிரினேட் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருக்கிறது.
இவர்களின் கருத்துக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் புகார் அளித்ததையடுத்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திலிப் கோஷ் மற்றும் சுப்ரியா ஷிரினேட் ஆகியோரின் கருத்துக்கள் மாதிரி நடத்தை விதிகளை மீறுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் கண்ணியத்தை பேணுவதற்கான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளையும் இது மீறுவதாக அமைந்திருக்கிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட இருவரும் மார்ச் 29ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க மாநில பாஜக கட்சியின் முன்னாள் தலைவரான திலீப் கோஸ் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் குடும்பப் பின்னணி மற்றும் தந்தை குறித்து அருவருக்கத்தக்க பேச்சை வெளிப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. பர்தமான்-துர்காபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திலீப் கோஷ் வீடியோ ஒன்றில் மம்தா பானர்ஜி தனது தந்தை யார் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அவர் மும்தா கோவா சென்றால் நான் கோவாவின் மகள் எனக் கூறுகிறார். திரிபுரா சென்றாள் திரிபுராவின் மகள் என கூறுகிறார். அவரது தந்தை யார் என்பதை மும்தா பானர்ஜி தான் முடிவு செய்ய வேண்டும் என அருவருக்கத் தக்க கருத்தை அவர் பேசியிருக்கிறார். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஷிரினேட்டின் கணக்குகளில் இருந்து சமூக ஊடக தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிடப்பட்டதை அடுத்து சுப்ரியா ஷ்ரினேட் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இது தொடர்பாக சர்ச்சைக்குரிய கமெண்ட்களை நீக்கிய அவர் தன்னுடைய கணக்கிலிருந்து யாரோ ஒருவர் இந்த செயல்களை செய்ததாக குற்றம் சாட்டி இருந்தார். மேலும் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களையும் அவர் நீக்கினார். எனினும் இவர்கள் இருவர் மீதும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கி இருக்கிறது.