டிஜிட்டல் பண பரிமாற்ற முறையை எளிமையாக இருக்க வேண்டும்... வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு...!
மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் டிஜிட்டல் பண பரிமாற்ற முறையை மேற்கொள்வதற்கு ஏற்றபடி வங்கிகள் தங்களது பண பரிமாற்ற முறை எளிமையாக இருப்பதை உறுதி செய்ய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
பணபரிமாற்ற முறைகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், வங்கிகள், அங்கீகாரம் பெற்ற வங்கி சாரா பணப்பரிமாற்ற சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை எளிமையான முறையில் பணபரிமாற்றம் மேற்கொள்வதை உறுதி செய்ய தங்களுடைய பணப்பரிமாற்ற முறைகளில், பணப்பரிமாற்றம் மேற்கொள்வதற்கான கருவிகளில் மாற்றுத்திறனாளிகளும் பணபரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின் அடிப்படையில் வங்கிகள்,வங்கிசாரா பணப்பரிமாற்ற சேவை வழங்குநர்கள் பணப்பரிமாற்ற முறைகள், பாயிண்ட் ஆப் சேல் எனப்படும் ஸ்வைப் கருவிகளில் மாற்றுத்திறனாளிகளும் பரிமாற்றம் செய்யும் வகையில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
அதே போல இந்த மாற்றங்கள் பணப்பரிமாற்ற கருவிகளின் பாதுகாப்பு அம்சத்தில் சமரசம் செய்வதாக இருக்கக்கூடாது. பணப்பரிமாற்ற முறைகள், கருவிகளில் என்னவிதமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன, எவ்வளவு காலத்துக்குள் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஒரு மாதத்துக்குள் பணப்பரிமாற்ற முறையின் பங்கெடுப்பாளர்கள் ரிசர்வ் வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பந்தன் வங்கியின் நிர்வாக இயக்குநர்
பந்தன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பார்த்த பிரதீம் சென்குப்தாவை நியமிப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளதாக பந்தன் வங்கி தெரிவித்துள்ளது. “பந்தன் வங்கி லிமிடெட்டின் இயக்குநர்கள் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி, பார்த்த பிரதீம் சென்குப்தாவை நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாகியாகவும் நியமிப்பதற்கு முன் அனுமதி அளித்துள்ளது. வங்கியின் அதிகாரி, பொறுப்பேற்ற தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் மூன்று வருட காலத்திற்கு, இது நவம்பர் 10, 2024 க்குப் பிறகு இருக்கக்கூடாது, ”என்று வங்கி பங்குச் சந்தைக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.