முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மின் கணக்கீடு செய்வதில் சிரமம்!… அரசு புதிய அறிவிப்பு!… அதிர்ச்சியில் மக்கள்!

08:36 AM Dec 14, 2023 IST | 1newsnationuser3
Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூலிக்க மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மிக்ஜம் புயலின் கோரத்தாண்டவம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதோடு மழை வெள்ளத்தால் பொதுமக்களின் வாகனங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதமடைந்தன. இதன்காரணமாக, அபராதமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு 18-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யாத நுகர்வோருக்கு அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூலிக்க மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

வெயிலின் தாக்கத்தால் அக்டோபர் மாதம் பொதுவாக மின் கட்டணம் இரண்டு மடங்கு உயரும். தற்போது, அந்த கட்டணத்தின் கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்த உத்தரவிட்டுள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags :
electricity calculationnew announcementஅதிர்ச்சியில் மக்கள்புதிய அறிவிப்புமின் கணக்கீடு செய்வதில் சிரமம்
Advertisement
Next Article