Silent-ஆ இருந்த விஜய்.. பயங்கர Violent-ஆ பாத்தேன்..என்ன வரவேற்பு பார்த்தீர்களா? - விஜய் சித்தி எமோஷனல்
தவெக தலைவர் விஜயின் அரசியல் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில், அதுகுறித்து, விஜய்யின் சித்தி சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டில் ஆரம்பக் கால விஜய் வாழ்க்கை குறித்துக் கூறியுள்ளார். அதில் விஜய் அரசியல் மாநாடு பற்றிய பல விசயங்களை உணர்வுப்பூர்வமாகப் பேசி இருக்கிறார்.
அவர் கூறுகையில், "விஜய் மாநாடு நடக்கும் போது மழை வரும் என்று வானிலை அறிக்கையில் சொன்னார்கள். மழை வந்தால் கூட்டம் கெட்டு விடுமே என்று பயந்து கொண்டே இருந்தேன். அவர் நல்ல மனசுக்கு அங்கே மழை வெள்ளம் வரவில்லை. மக்கள் வெள்ளம்தான் வந்தது. அதுவே பெரிய ஆசீர்வாதம்தான். நான் சித்தியா இருப்பதே பாக்கியம். அதைவிட இந்த மாதிரியான காட்சிகளைப் பார்ப்பது அதைவிடப் பாக்கியம்.
விஜய் இயல்பாக மிகப் பொறுமை. அதே எப்படி மெதுவாக வாழ்க்கையில் உயர்ந்து வந்தாரோ அதே மாதிரி அவர் ஏற்றிய அந்தக் கொடி பொறுமையாக மேலே ஏறிப் போய் பறந்தது. அந்தக் கொடி மாதிரி அவர் உயரத்தில் பறக்கப் போகிறார். இனிமேல் அந்தக் கொடி மட்டும் தான் தமிழ்நாட்டில் பறக்கப் போகிறது பாருங்கள்" என்றார்.
முதலில் விஜய்யை ஒரு மகனாகப் பார்த்தேன். அடுத்து ஒரு நடிகராகப் பார்த்தேன். இன்றைக்கு ஒரு தலைவராகப் பார்க்கிறோம். என்னைப் பொறுத்தவரை விஜய் எனக்குக் குழந்தைதான். சினிமாவில் படிப்படியாகக் கஷ்டப்பட்டு அவர் இந்த உயரத்திற்கு வந்தார். அந்த இடம் சாதாரணமாகக் கிடைக்கவில்லை. அதை உடனே விட்டுவிட்டு அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். அது மிகப்பெரிய துணிச்சல்.
சின்ன வயதிலிருந்து விஜய்யைப் பார்த்தவள் நான். அவ்வளவு சைலண்ட் ஆன பையன் அவர். அமைதியாக இருந்த விஜய்யை இப்படி நடிக்கிறார் என்று நான் அன்று ஆச்சரியப்பட்டேன். அதை மாதிரிதான் அவர் மேடையில் பேசுவதைக் கேட்டு வியந்து போனேன். என்ன தைரியமாகப் பேசினார். என்னால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு பார்க்கவே முடியவில்லை. அப்படிப் பேசினார். மனதில் என்னென்னவோ யோசனைகள். அவர் மக்கள் உங்களை நம்பி வந்திருக்கிறேன் என்று சொன்னபோது ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.
அவரிடம் இல்லாத பணம் இல்லை. இப்போதும் அவர் உச்சத்தில் இருக்கிறார். எவ்வளவு பணம் இருந்தாலும் ஒருவரும் அதை வேண்டாம் எனச் சொல்லமாட்டார்கள். அதான் இயல்பு. ஆனால், விஜய் இன்றைக்கு அதைத் தூக்கி எறிந்துவிட்டு மக்களை நம்பி வந்துள்ளார். மேடையில் அவர் ராம்ப் வாக் வந்தபோது என்ன வரவேற்பு பார்த்தீர்களா? திடீரென்று யாரோ துண்டை தூக்கிப் போட்டவுடன் அதற்கு மதிப்பு அளித்து கழுத்தில் எடுத்துப் போட்டுக் கொண்டார். இதை எல்லாம் முன்கூட்டியே திட்டமிட முடியாது" என்கிறார்.
Read more ; துப்பாக்கியை தக்கவைத்து கொண்டாரா சிவகார்த்திகேயன்?அமரன் முதல் நாள் வசூல் இவ்வளவா..