For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Madurai: அண்ணாமலை படித்து பாஸ் செய்தாரா‌...? பிட் அடித்தாரா..‌? செல்லூர் ராஜூ

05:30 AM Apr 12, 2024 IST | Vignesh
madurai  அண்ணாமலை படித்து பாஸ் செய்தாரா‌     பிட் அடித்தாரா  ‌  செல்லூர் ராஜூ
Advertisement

கவுன்சிலராகக் கூட வெற்றி பெறாத அண்ணாமலை படித்து பாஸ் செய்தாரா? பிட் அடித்தாரா..‌? அழகிரியை எதிர்த்து அரசியல் செய்த எனக்கு அண்ணாமலை எம்மாத்திரம்; அதிமுகவையும் அதன் தலைவர்களையும் பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்‌

Advertisement

மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; ஒரு ஆட்டுக்குட்டி உயரமான சுவரில் நின்று கொண்டு அந்த வழியாக போன அந்த வழியாக சென்ற சிங்கத்தை பார்த்து குலையை பறித்து எனக்கு கொடு என்று கேட்டதாம் என்ற செல்லூர் ராஜூ, சுவர் என்பது ஆளுங்கட்சி, மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் மிதப்பில் அண்ணாமலை பேசி வருகிறார்.

உங்கள் அப்பன் இல்ல யார் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்றும் காட்டமாக கூறினார். அரசியலில் கத்துக்குட்டி அண்ணாமலை என்றும் வரலாறு தெரியாதவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் ரூபாய் கொடுத்தும் அண்ணாமலைக்கு ஓட்டு போடாமல் மக்கள் தோற்கடித்தார்கள் என்றும் அதிமுகவையும் அதிமுக தலைவர்களையும் பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை.

கவுன்சிலராகக் கூட வெற்றி பெறாத அண்ணாமலை படித்து பாஸ் செய்தாரா? பிட் அடித்தாரா..‌? அழகிரியை எதிர்த்து அரசியல் செய்த எனக்கு அண்ணாமலை எம்மாத்திரம்; அதிமுகவையும் அதன் தலைவர்களையும் பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை என்றார்.

Tags :
Advertisement