முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விஜய் மாநாட்டில் இதை கவனிச்சீங்களா..? பாஜகவின் ’பி’ டீம் தான் தவெக..!! இதுதான் ஆதாரம்..!!

From the day Vijay announced his entry into politics, he was criticized as BJP's B team.
10:25 AM Oct 27, 2024 IST | Chella
Advertisement

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். விஜய் 2026 தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக கொள்கை விளக்க மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று நடைபெறவுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

இந்நிலையில், தவெக மாநாட்டுத் திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கட்-அவுட் நடுவே விஜய்க்கும் 70 அடி உயரத்தில் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை விஜய் முல்லைப்படுத்தியுள்ளார். அதேபோல், வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், சேர, சோழ, பாண்டியர், தீரன் சின்னமலை ஆகியோரது கட்-அவுட்டும் இடம்பெற்றுள்ளன.

இதில், தமிழண்ணையின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவே விஜய்க்கும் அவரது தமிழக வெற்றிக் கழகத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இதில், பாஜக வெளியிட்ட தமிழ்த்தாய் புகைப்படம் கட்-அவுட்டாக வைக்கப்பட்டுள்ளது. 2022இல் மு.க ஸ்டாலின் ஒரு தமிழணங்கு ஓவியத்தை வெளியிட்டார். அதற்குப் போட்டியாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தமிழ்த்தாய் புகைப்படத்தை பதிவிட்டார்.

இப்போது விஜய்யின் தவெக மாநாட்டுத் திடலில், அண்ணாமலை வெளியிட்ட தமிழ்த்தாயின் புகைப்படம் போல் தமிழண்ணைக்கு கட்-அவுட் வைக்கப்பட்டிருக்கிறது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களும் களத்தில் இறங்கி சம்பவம் செய்து வருகின்றனர். விஜய் அரசியலில் களமிறங்குவதாக அறிவித்த நாள் முதல், அவர் பாஜகவின் பி டீம் என விமர்சனங்கள் எழுந்து வந்தன. அதுமட்டுமின்றி, தேசிய குடியுரிமை சட்டம், நீட் தேர்வு விவகாரங்களில் பாஜகவை விஜய் நேரிடையாக விமர்சிக்கவே இல்லை. இதுவும் அவர் மீது பாஜகவின் நிழல் என்ற முத்திரை விழ காரணமாக அமைந்தது.

ஆனால், பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். இதனால் விஜய்யும் பெரியாரின் கொள்கையை முன்னிறுத்தி அரசியல் செய்வார் என எதிர்பார்ப்பு எழுந்தது. விஜய்யின் இந்த நடவடிக்கையை அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்று இருந்தனர். இந்நிலையில், அண்ணாமலை வெளியிட்ட தமிழ்த்தாய் புகைப்படத்தை, மாநாட்டுத் திடலில் கட்-அவுட்டாக வைத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் பாஜகவின் பி டீம் தான் என விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே, தவெகவின் கொள்கை, சித்தாந்தம், அக்கட்சியின் கொடி ஆகியவை குறித்து விஜய் இன்றைய தினம் என்ன விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதோடு பாஜகவின் தமிழ்த்தாய் புகைப்படம் கட்-அவுட்டாக வைக்கப்பட்டதற்கும் விஜய் விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : தவெக மாநாட்டில் தொண்டர்களுக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன..? விஜய் எப்போது பேசுவார்..?

Tags :
தமிழக வெற்றிக் கழகம்தவெகவிஜய்
Advertisement
Next Article