ரசிகை உயிரிழந்த விவகாரம்.. நேரில் ஆஜரான அல்லு அர்ஜுன்.. போலீசார் என்ன கேட்டார்கள்?
ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் உள்ள சந்தியா திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு புஷ்பா-2 பிரீமியர் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற 35 வயதான ரேவதி என்ற பெண் கூட்டத்தில் சிக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது மகனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியானது. இந்த வழக்கில் அல்லூ அர்ஜூன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, ஹைதராபாத்தில் இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுனின் வீடு மீது உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (OU JAC) எனக் கூறிக்கொள்ளும் மாணவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சிக்கடாபள்ளி பொலிஸார் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, இன்று இரண்டாவது முறையாக நடிகர் அர்ஜுன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். போலீசார் அவரிடம் கேட்ட கேள்விகளில் வருமாறு:
1. பிரீமியருக்கு வர போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது தெரியுமா?
2. காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட பிறகும் பீரிமியம் காட்சிக்கு அழைப்பு விடுத்தது யார்?
3. வெளியே கூட்ட நெரிசல் பற்றி எந்த காவல்துறை அதிகாரியாவது உங்களுக்குத் தெரிவித்தாரா?
4. பெண்ணின் மரணம் உங்களுக்கு எப்போது தெரியும்?