For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணர்ந்ததா பறவைகள்?… வைரலாகும் ஜப்பான் வீடியோ!

10:02 AM Jan 02, 2024 IST | 1newsnationuser3
நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணர்ந்ததா பறவைகள் … வைரலாகும் ஜப்பான் வீடியோ
Advertisement

ஜப்பானில் நிலநடுக்கத்தை முன் கூட்டியே உணர்ந்த பறவைகள் நிலைகொள்ளாமல் அலறி அங்குமிங்கும் ஓடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

Advertisement

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று(01-01-24) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஹோன்சு அருகே 13 கி.மீ ஆழத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்து சுனாமி எச்சரிக்கை அந்நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன், வானில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் குழுவாக பறந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.பறவைகளின் இந்த செயல் சுனாமி வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் பலர் பதிவிட்டுள்ளனர்.

உண்மையில் விலங்குகள் பூகம்பத்தை உணர்ந்து கொள்ளுமா என்றால், அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. விஞ்ஞானம் அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால் சீனா, ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நிலநடுக்கம் அதிகம் நிகழக்கூடிய நாடுகள், ‘விலங்குகளுக்கு இந்த ஆற்றல் உண்டு’ என்று வாதிடுகின்றன. இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழ்ந்திருந்தால், மனிதனும் பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறிய முடியும் என்கிறார்கள். விலங்குகள் உண்பது, உறங்குவது எல்லாமே பொதுவாக தரையில்தான்.

தரைமீதுதான் பெரும்பாலான நேரங்களில் காதை வைத்துத் தூங்கும், தரைக்கும் விலங்குகளுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அதனாலே தரையில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக்கூட அவற்றால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ரயில் தண்டவாளத்தில் காதை வைத்தால் தூரத்தில் வரும் ரயில் சத்தம் கேட்பதைப் போல, தரையின் மீதே காதை வைத்திருப்பதால் தூரத்தில் ஏற்படும் நில நடுக்கத்தின் சத்தத்தைக் கேட்க முடிகிறது என்கிறார்கள்.

Tags :
Advertisement