முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Annamalai: ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்த வீடியோ...? உண்மை செய்தி என்ன...?

07:16 PM Mar 29, 2024 IST | Vignesh
Advertisement

அண்ணாமலை தனக்கு ஆரத்தி எடுத்த பெண்மணிக்கு பணம் கொடுப்பது போன்ற வெளியாகிய வீடியோவின் உண்மை என்ன..?

Advertisement

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் கோவை மக்களவைத் தொகுதியும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரச்சாரத்திற்கு சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனக்கு ஆரத்தி எடுத்த பெண்மணிக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில், வீடியோவின் உண்மை நிலை குறித்தான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உண்மை என்ன...?

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் "என் மண் என் மக்கள்" யாத்திரையின் பொழுது மீனவர் வீட்டிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்றிருந்தார். அப்போது அங்கே அவரை பெண் ஒருவர் ஆரத்தி எடுத்து வரவேற்றார். அப்பொழுது தன்னுடைய கையில் இருந்த பணத்தை எடுத்த அந்த பெண்மணியிடம் கொடுத்தார். அந்த வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Next Article