குட் நியூஸ்!!! சுகர் பேஷண்ட்ஸ் ஸ்வீட் சாப்பிடலாம்… ஆனால் இந்த நேரத்தில் மட்டும் தான் சாப்பிட வேண்டும்…
பொதுவாக பண்டிகைகள் என்றால் முதலில் நினைவிற்கு வருவது பலகாரங்கள் தான். அதிலும், குறிப்பாக இனிப்பு வகைகள் தான். குடும்பத்துடன் சேர்ந்து பலகாரம் சாப்பிட்டு அனைவரும் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில், ஒரு சிலர் மட்டும் சோகமாக இருப்பது உண்டு. அவர்கள் வேறு யாரும் இல்லை சர்க்கரை நோயாளிகள் தான். என்னதான் வகைவகையாக இனிப்பு பலகாரம் இருந்தாலும் எதையும் சாப்பிட முடியாமல் இவர்கள் வருத்தத்தில் இருப்பது உண்டு.
பல குடும்பத்தில் உள்ளவர்கள், இனிப்பை தொட்டாலே சுகர் கூடுவது போல் ஒரு பீஸ் பலகாரத்தை கூட சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுப்பது இல்லை. குறிப்பாக வயதானவர்கள் இதனால் வாய்க்கு ருசியாக சாப்பிட கூட முடியவில்லை என்று மன வருத்தத்தில் இருப்பது உண்டு. அதே சமயம் மேலும் சிலர், ஒரு நாள் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்று, இனிப்பை அள்ளி வாயில் திணிப்பது உண்டு. இதனால் அவர்களுக்கு சுகர் லெவல் ஜெட் வேகத்தில் எகிறி விடும். பின்னர் அதன் பின் விளைவுகளோடு அவஸ்தைப்படுவது உண்டு.
அப்போ, நாங்க இனிப்பு சாப்பிடவே கூடாதா? என்று பலர் கேட்பது உண்டு. இதற்க்கு மருத்துவர்கள் கூறும் கருத்து, உங்களுக்கு சற்று சந்தோஷத்தை கொடுக்கும். ஆம், மருத்துவ நிபுணர்கள், சுகர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குறைந்த அளவு இனிப்புகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த இனிப்பு சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது, மாறாக அதிகளவு இனிப்பு சாப்பிட்டால் மட்டும் தான் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும் என்று கூறியுள்ளனர். ஆனால், இனிப்பு பானங்கள் மற்றும் பழ ஜூஸ் ஆகியவையை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், பானங்களில் உள்ள சர்க்கரை நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீக்கிரம் அதிகரித்துவிடும்.
நீங்கள் ஒரு வேலை குறைவான இனிப்பு சாப்பிடாலும், அதை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இது மிகவும் தவறான ஒன்று. நாம் இப்படி செய்தால் இரத்த சர்க்கரை அளவு கிடுகிடுன்னு உயர்ந்துவிடும். அதே சமயம் இரவு நேரங்களிலும் இனிப்பு சாப்பிட கூடாது. அப்படி நாம் இரவு நேரத்தில் இனிப்பு சாப்பிட்டால், சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இதனால் தூக்கம் பாதிக்கப்பட்டு வேறு பிரச்சனைகள் ஏற்படும். அதனால் சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிட ஆசைப்பட்டால் காலை அல்லது மதிய உணவிற்கு பிறகு சிறிதளவு இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
Read more: “அம்மா, அந்த அண்ணா, என்ன இங்க தொட்டாங்க”; சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தாய்..