BP, சுகர் மாத்திரைகளின் விலை கடும் உயர்வு!!
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் பல்வேறு நோய்களுக்கான மருந்துகளின் விலை உச்ச வரம்பை நிர்ணயம் செய்து பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மிக முக்கியமான அறிவிப்பாகக் கருதப்படுகிறது.
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், நாட்டில் உள்ள 54 'மருந்து ஃபார்முலாக்கள்' மற்றும் சிறப்பு அம்சங்களைக் கொண்ட 8 பொருட்களின் விலையின் உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையானது பல மல்டி-வைட்டமின் மருந்துகள், சில இதய நோய் மருந்துகள், பாக்டீரியா தொற்று மற்றும் ஒவ்வாமை மருந்துகள், நீரிழிவு மருந்துகள் உட்பட பல மருந்துகளின் அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளது.
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் சமீபத்தில் தனது 124வது கூட்டத்தில் இந்த மருந்துகளின் விலை குறித்து முக்கிய முடிவு எடுத்தது. அதன்படி, BP, சர்க்கரை நோய் உள்ளிட்ட 54 வகையான மருத்துகளின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சர்க்கரை நோயாளிகள் அதிகம் பயன்படுத்தும் மெட்ஃபோர்மின், லினாக்ளிப்டின் மாத்திரைகள் விலை 15ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்த மாத்திரைகள் டெல்மிசார்டன், சில்னி டிபை போன்றவற்றின் விலை ரூ.7.14 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மருந்து விலை வரம்பு பல பாக்டீரியா தொற்று நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும். பாக்டீரியா பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் கால்சியம், வைட்டமின்கள் மற்றும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சிப்ரோஃப்ளோக்சசின் பாக்டீரியா எதிர்ப்பு ஊசியின் சில்லறை விலை ஒரு மில்லிலிட்டருக்கு (மிலி) ரூ.0.23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே சமயம் உயர் இரத்த அழுத்தத்திற்கான டெல்மிசார்டன், குளோர்தாலிடோன் மற்றும் சில்னிடிபைன் அடங்கிய மாத்திரையின் விலை ரூ.7.14 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Read more ; குட்நியூஸ்!. அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரும்!. அவசர கடிதம்!. 8வது ஊதியக்குழு கோரிக்கை வலுத்தது!.