For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

20 வருட சாதனை.. துலிப் கோப்பை தொடரில் தோனியின் சாதனையை சமன் செய்த துருவ் ஜுரல்..!!

Dhruv Jural equals Dhoni's record in Tulip Cup series..!!
08:06 PM Sep 09, 2024 IST | Mari Thangam
20 வருட சாதனை   துலிப் கோப்பை தொடரில் தோனியின் சாதனையை சமன் செய்த துருவ் ஜுரல்
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை இளம் வீரர் துருவ் ஜுரல் சமன் செய்துள்ளார். துலிப் கோப்பை தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்ச்கள்(7) பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ஜுரலும் பெற்றார்.

Advertisement

துலீப் கோப்பை தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி 321 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பின்னர் களமிறங்கிய இந்தியா பி அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 184 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து 275 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா ஏ அணி 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது.  இந்த போட்டியில், இந்தியா பி அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்தியா ஏ அணியின் விக்கெட் கீப்பரான துருவ் ஜுரல், முதல் இன்னிங்ஸில் ஒரு கேட்சும், இரண்டாது இன்னிங்ஸில் 7 கேட்சுகளும் பிடித்து அசத்தலான பீல்டிங் செய்தார். இதன்மூலம் 2004-05 துலிப் தொடரிலில், கிழக்கு மண்டலத்துக்காக விளையாடி, தோனி படைத்த சாதனையை 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜுரல் சமன் செய்துள்ளார்.

மூன்று, நான்காம் இடம் : 1973 - 74 துலிப் தொடரில் மத்திய மண்டலத்துக்காக விளையாடிய சுனில் பெஞ்சமின், 6 கேட்சுகள் பிடித்து 3-வது இடத்திலும், 1980-81ஆம் ஆண்டில் தெற்கு மண்டலத்துக்காக விளையாடி 6 கேட்சுகள் பிடித்த சதானந்த விஸ்வநாத் 4-வது இடத்திலும் உள்ளனர்.

Read more ; பள்ளி மாணவர்களே.. காலாண்டு தேர்வு வரப்போகுது!! தேதி இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க!!

Tags :
Advertisement