முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஐபிஎல் 2024 தொடரில் தோனி விளையாட மாட்டாரா..? முக்கிய அப்டேட் கொடுத்த சி.இ.ஓ..!!

02:26 PM Dec 25, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஐபிஎல் 2024 தொடரில் தோனி அணியில் விளையாடுவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

Advertisement

சென்னை அணியில் கேப்டனாக தோனி நீடித்து வருகிறார். அடுத்த ஆண்டு மார்ச்சில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், கடந்த 19ஆம் தேதி வீரர்களை தேர்வு செய்யும் மினி ஏலம் நடத்தப்பட்டது. இதில் சென்னை அணியில் டேரில் மிட்செல், ரச்சின் ரவிந்திரா, சமிர் ரிஸ்வி, ஷர்துல் தாகூர் உள்பட 6 வீரர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர். அடுத்த கட்டமாக பயிற்சியை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த தொடரின்போது தோனிக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் தோனி தொடர்ந்து விளையாடினார். கடந்த மே மாதம் இறுதியில் தோனிக்கு மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி இடம்பெறுவாரா என்பது குறித்த கேள்விக்கு சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் அளித்துள்ளார்.

”தோனி விளையாடுவது குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது. அதுபற்றி அவரே நேரடியாக உங்களிடம் சொல்வார். அவர் இப்போது நன்றாக இருக்கிறார். ஜிம்மில் தினமும் ஒர்க் அவுட் செய்கிறார். இன்னும் 10 நாட்களில் அவர் வலை பயிற்சியை ஆரம்பித்து விடுவார் என்று எதிர்பார்க்கிறேன்”என்று கூறியுள்ளார். தோனியின் வலைப் பயிற்சி குறித்து காசி விஸ்நாதன் கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
ஐபிஎல் தொடர்சென்னை சூப்பர் கிங்ஸ்மகேந்திர சிங் தோனிவிளையாட்டு
Advertisement
Next Article