தோனி தக்கவைப்பு!. 'மிகப்பெரிய ஜம்பவானுக்கு அவமரியாதையாக இருக்கக் கூடாது'!. ரசிகர்கள் கருத்து!
Dhoni: நாட்டுக்காக விளையாடிய புகழ்பெற்ற கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்டரான எம்.எஸ். தோனியை, இந்தாண்டு ஐபிஎல்லில் சிஎஸ்கே தக்கவைக்கப்படுவது குறித்த ரசிகர்களின் கருத்துகள் எதிர்வினைகளை பெற்றுள்ளன.
ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் இதற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் ஏலத்திற்கு முன்பு சில விதிகளை மாற்றி உள்ளது ஐபிஎல் நிர்வாகம். மற்ற ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த முறை பிசிசிஐ தக்க வைப்புத் தொகையில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது.
மேலும் பழைய விதிகளையும் கொண்டு வந்துள்ளது. இதனால் ஏலம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்த புதிய விதியின் மூலம் ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். அதே போல ரைட் டு மேட்ச் (RTM) விதிமுறைகளும் திரும்ப வந்துள்ளது. மெகா ஏலத்தில் ஒரு வீரரை ஏலத்தில் RTM பயன்படுத்தியும் எடுத்து கொள்ள முடியும்.
சர்வதேச போட்டிகளில் 5 ஆண்டுகள் விளையாடாத வீரர்களை அன்கேப்டு பிளேயராக தக்க வைக்கும் முறையும் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் தோனி ஐபிஎல் 2025ல் விளையாட முடியும். தோனியை அன்கேப்டு பிளேயராக தக்க வைத்து கொள்ள முடியும் அவரை சிஎஸ்கே ரூ.4 கோடிக்கு தக்க வைக்கும். இந்த விதி மற்ற அணிகளைவிட சிஎஸ்கே-விற்கு அதிகம் உதவும். ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு அதனை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இந்த தொகைக்கு தோனி தக்க வைக்கப்பட்டால், மற்ற வீரர்களை தக்கவைக்க மிகவும் உதவியாக இருக்கும். தோனி பெரிதாக பேட்டிங் செய்யவில்லை என்றாலும், அவர் களத்தில் இருப்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்தநிலையில், நாட்டுக்காக விளையாடிய புகழ்பெற்ற கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்டரான எம்.எஸ். தோனியை, இந்தாண்டு ஐபிஎல்லில் சிஎஸ்கே தக்கவைக்கப்படுவது குறித்த ரசிகர்களின் கருத்துகள் எதிர்வினைகளை பெற்றுள்ளன. தோனியை சிஎஸ்கே தக்கவைத்துக்கொள்ளும்பட்சத்தில் கிரிக்கெட் பிரியர்களில் ஒரு பிரிவினர் மகிழ்ச்சியடைந்தாலும், இதன்மூலம் மிகப்பெரிய ஜாம்பவான், முன்னாள் கேப்டனை அவமரியாதை செய்யும் விதமாக இருக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Readmore: வரலாற்றில் இன்றைய சிறப்பு!. சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்!.