தோனி விவசாயம் செய்வது இதற்கு தானா..? வருமான வரியில் இருந்து தப்பிக்க மாஸ்டர் பிளான்..!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி வேறு பெரிய பிஸ்னஸ் செய்யாமல் விவசாயம் செய்வது ஏன் என்பது தொடர்பாக நெட்டிசன்கள் விவாதம் செய்ய தொடங்கியுள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள வருமான வரி மாற்றம் புதிய வருமான வரி முறையை தேர்வு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாத ஊதியம் பெறுவோருக்கு நிரந்தர கழிவு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி என இரண்டு கூறுகளைக் கொண்ட நேரடி வரிகளில் இந்தியா தொடர்ந்து உயர்வை கண்டு வருகிறது. இதில் கவலை அளிக்கும் விஷயம் 2022-2023இல் கார்ப்பரேட் வரிகளை முந்தி உள்ளது தனிநபர் வருமான வரி. கார்ப்பரேட் நிறுவனங்களை விட, பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், வரிகளில் அதிக பங்களிப்பு செய்கின்றனர். அதாவது, நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள். நீங்கள் வரி செலுத்துவீர்கள்.
உங்கள் நிறுவனம் வரி செலுத்தும். உதாரணமாக, உங்களின் வருமானம் 2 லட்சத்திற்கு நீங்கள் செலுத்தும் வரியை விட, உங்கள் நிறுவனம் செலுத்தும் வரி குறைவாக இருக்கும். வரி அடிப்படை அதிகமாக இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கார்ப்பரேட் வரியை விட வருமான வரி குறைவு. இப்படிப்பட்ட நிலையில்தான், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி வேறு பெரிய பிஸ்னஸ் செய்யாமல் விவசாயம் செய்வது ஏன்? என்பது தொடர்பாக நெட்டிசன்கள் விவாதம் செய்ய தொடங்கியுள்ளனர்.
அதாவது, இந்தியாவில் விவசாயத்திற்கு வரி இல்லை. பல கோடி வருமானம் வந்தாலும் வரி கிடையாது. தோனி விவசாயத்தில் முதலீடு செய்துள்ளார். விவசாயம் செய்கிறார். உள்ளூர் சந்தையில் தனது பொருட்களை விற்பனை செய்கிறார். விவசாய வருமானத்திற்கு பூஜ்ஜிய வரி. கூடுதலாக, மானியங்களையும் பெறுவார். அவரிடம் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய தொலைநோக்கு பார்வை உள்ளது என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். தோனி ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி உள்ளிட்ட பழங்களை விற்பனை செய்யும் விவசாயத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Read More : ”கேரளாவுக்கு யாரும் போகாதீங்க”..!! மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தல்..!!