ரூ.34,000 கோடி வங்கிக்கடன் மோசடி! DHFL நிறுவன இயக்குநர் அதிரடி கைது…!!
34 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் தீவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவன முன்னாள் இயக்குனர் தீரஜ் வாத்வானை சி.பி.ஐ. இன்று கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த தீரஜ் வதாவன் மற்றும் கபில் வதாவன் ஆகிய இருவரும் சகோதரர்கள். இவர்களில் டிஎச்எஃப்எல் எனப்படும் தீவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக தீரஜ் வதாவன் இருந்தபோது, சகோதரர்கள் இருவரும் சேர்ந்து 17 வங்கிகளில் சுமார் ரூ.34,000 கோடியை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
அந்த வங்கிகள் புகார் அளித்தது. நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி மோசடியாக கருதப்பட்ட இந்த புகாரில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கடந்த ஜூலை, 2023ல் தீரஜ் வதாவனை கைது செய்தது. இருப்பினும், அதே ஆண்டில் சிறப்பு நீதிமன்றம் தீரஜ் வதாவனுக்கு ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தாலும், அவரது ஜாமின் ரத்து செய்யப்படவில்லை.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ., மேல் முறையீடு செய்தது. இதில் சிறப்பு கோர்ட்டும், டில்லி கோர்ட்டும் சட்டவிதிகளை முறையாக கடைபிடிக்கவில்லை என கூறி தீரஜ் வாத்வான் ஜாமின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீரஜ் வாத்வானை கைது செய்தனர்.
Read More ; Phone Call முதல் YouTube வரை..! Google I/O 2024 நிகழ்வில் வெளியான முக்கிய அறிவிப்புகள்!