முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"சூப்பர் ஸ்டாருக்கே சிரமத்தை கொடுத்துட்டேன்.." தமிழர்கள் குறித்த கொச்சைப்பதிவு..!! பகிரங்க மன்னிப்பு கேட்ட தன்யா பாலகிருஷ்ணன்.!

06:58 PM Feb 02, 2024 IST | 1newsnationuser4
Advertisement

லைக்கா நிறுவன தயாரிப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். இந்தத் திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Advertisement

ராஜா ராணி மற்றும் கார்பன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணா. இவரால் சலாம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டர் இணையதளத்தில் தமிழர்களையும் சிஎஸ்கே அணியையும் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் தன்யா பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்ததாக ட்விட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து தமிழர்களை கொச்சைப்படுத்தும் ஒருவருக்கு ஐஸ்வர்யா வாய்ப்பு கொடுக்கலாம்.? என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது சமூக வலைதள பதிவு பற்றி விளக்கம் அளித்திருக்கிறார் தன்யா பாலகிருஷ்ணன். இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டு இருக்கும் அவர் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார். தனது பெயரில் தமிழக மக்களை கேவலப்படுத்தும் விதமாக நடந்து கொண்ட செயலுக்கு மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருக்கிறார். 12 வருடங்களுக்கு முன்பு சிஎஸ்கே அணி பற்றியும் தமிழர்கள் பற்றியும் தனது பெயரில் வெளியான பதிவு வேறொரு நபரால் சித்தரிக்கப்பட்டது என விளக்கம் அளித்துள்ளார் .

சர்ச்சைக்குரிய அந்த கருத்து துரதிஷ்டவசமாக தனது பெயரில் வெளியாகியதாக தெரிவித்த அவர் அதற்கு வருத்தம் தெரிவித்து தமிழர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சர்ச்சையால் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சர்ச்சை தொடர்பாக பலத்த கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார் தன்யா பாலகிருஷ்ணன்.

Tags :
Apologydhanya balakrishnanLal Salaamrajnikanthtamil cinema
Advertisement
Next Article