பக்தர்களே..!! திடீர் அறிவிப்பு..!! செல்போன்கள் யாரும் கொண்டு வரக்கூடாது..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாகம் உத்தரவு..!!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினந்தோறும் தமிழ்நாடு மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசித்து செல்கின்றனர். ஏற்கெனவே மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்தூர், பழனி முருகன் கோயில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட கோயில்களில் செல்போன் பாதுகாப்பு அறையும் திறக்கப்பட்டுள்ளது. போன்களை, பாதுகாப்பு அறையில் வைத்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர், தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் உங்கள் செல்போனை பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில் தற்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு உள்ளேயும் செல்போன் கொண்டு செல்ல அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கோயில் முன்பு செல்போன்கள் பாதுகாக்கும் அறை வைக்கப்பட்டுள்ளது. இங்கு ரூ.5 கட்டணம் செலுத்தி செல்போனை பாதுகாப்பாக வைத்துச் செல்ல வேண்டும். பின்னர், டோக்கனை கொடுத்து செல்போனை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : இஸ்ரேலுக்கு சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை அனுப்ப டிரம்ப் உத்தரவு!. பைடனின் தடையை நீக்கி அதிரடி!