மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. பதவி ஏற்பு தேதியை அறிவித்த பாஜக..!! - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடந்தது. நவம்பர் 23-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியை பதிவு செய்தது. பாஜக மட்டுமே 132 தொகுதிகளை கைப்பற்றி வியப்பை ஏற்படுத்தியது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன.
காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதியில் உத்தவ் தாக்கரே சிவசேனா 20, காங்கிரஸ் 16, என்சிபி 10 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்று சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் முதல்வர் யார் என்ற குழப்பம் இன்று வரை நீடித்து வருகிறது. குறிப்பாக, யார் முதல்வர் என்பதில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சிவசேனா ஆதரவாளர்கள் மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வர் பதவி வகிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதுபோல் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள், தேவேந்திர பட்னாவிஸே முதல்வராக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், அங்கு அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்பார் என்று பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுதிர் முங்கந்திவார் திங்கள்கிழமை அறிவித்தார். இந்த முடிவு குறித்து ஏக்நாத் ஷிண்டே கோபப்படவில்லை என்றும் சுதிர் முங்கந்திவார் கூறினார். டிசம்பர் 5 ஆம் தேதி மும்பையில் பிரமாண்டமான பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
Read more ; அது என்ன CTC..? மாத சம்பளம் வாங்குபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!