For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

''உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி''..!! மே தின வாழ்த்து கூறிய TVK தலைவர் விஜய்..!!

01:54 PM May 01, 2024 IST | Chella
  உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி       மே தின வாழ்த்து கூறிய tvk தலைவர் விஜய்
Advertisement

''உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி'' எனக்கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆண்டுதோறும் மே மாதம் 1ஆம் தேதி உழைப்பாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உழைப்பாளர்களை நினைவுக்கூறவும், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும். அதன்படி, இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் உழைப்பாளர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் உழைப்பாளர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், '' உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு பறை சாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ''மே தின'' நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.

மேலும் அந்த பதிவில் போட்டோ ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில், உழைப்பாளர்களை குறிக்கும் வகையிலான போட்டோ மற்றும், விஜயின் போட்டோ இடம்பெற்றுள்ளது. அதோடு மே 1ஆம் தேதி என பெரியதாக உள்ளது. அதோடு, ''உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கான உரிமகளை நிலைநாட்ட உறுதியேற்போம்!'' என குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் இந்த பதிவை தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Read More : ரஜினியின் ’கூலி’ படத்திற்கு செக் வைத்த இளையராஜா..!! உடனே நீக்குங்கள்..!! நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு..!!

Advertisement