For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குட் நியூஸ் மக்களே.. புற்றுநோய்க்கு தடுப்பூசி வந்தாச்சு!! முதல் கட்ட சோதனையே 100% சக்சஸ்..

Developed against cancer cells, the vaccine was successful in its first clinical trials. This vaccine is developed by Moderna Pharmaceuticals.
03:36 PM Sep 15, 2024 IST | Mari Thangam
குட் நியூஸ் மக்களே   புற்றுநோய்க்கு தடுப்பூசி வந்தாச்சு   முதல் கட்ட சோதனையே 100  சக்சஸ்
Advertisement

புற்றுநோய் செல்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட, தடுப்பூசி அதன் முதல் மருத்துவ பரிசோதனைகளில் வெற்றி பெற்றது. இந்த தடுப்பூசி Moderna Pharmaceuticals நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கோவிட் தடுப்பூசிகளை உருவாக்கிய mRNA நிறுவனம் புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அழிக்க உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்த தடுப்பூசி உருவாக்கி உள்ளது.

Advertisement

கோவிட்19 தடுப்பூசிகளுக்கு பயன்படுத்தப்படும் எம்.ஆர்.என்.ஏ., தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, செல்கள் மற்றும் கட்டிகளை அடையாளம் காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்ட சோதனையில், எட்டு நோயாளிகளுக்கு கட்டிகளின் வளர்ச்சி இல்லை மற்றும் புதிய கட்டிகள் எதுவும் உருவாகவில்லை என்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து, லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பரிசோதனை புற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் தோபாஷிஸ் சர்க்கர் கூறுகையில், புற்றுநோய்க்கு மிகவும் திறம்பட சிகிச்சை அளிக்க உதவும் வகையில் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதையும் நாங்கள் நிரூபித்துள்ளோம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று மிக விரைவில் தெரியவரும். இந்த தடுப்பூசிகள் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

புற்றுநோய் நோய் எதிர்ப்பு சிகிச்சையை மதிப்பிடுவதற்கான இந்த ஆய்வு ஒரு முக்கியமான முதல் படியாகும். தீவிரமான பக்கவிளைவுகள் இல்லாமல் சிகிச்சையை நன்கு பொறுத்துக் கொள்ள முடியும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more ; டிடி முதல் மணிமேகலை வரை.. பிரியங்கா எண்ட்ரீ-க்கு பிறகு காணாமல் போன விஜய் டிவி தொகுப்பாளர்கள்..!!

Tags :
Advertisement