For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பட்டா மாறுதலுக்கான விவரங்கள்..!! பத்திரப்பதிவு வரும் அதிரடி மாற்றங்கள்..!! மக்களே இனி ஈசியா தெரிஞ்சிக்கலாம்..!!

A government order has been issued to change the name on the property registration certificate.
08:27 AM Jan 23, 2025 IST | Chella
பட்டா மாறுதலுக்கான விவரங்கள்     பத்திரப்பதிவு வரும் அதிரடி மாற்றங்கள்     மக்களே இனி ஈசியா தெரிஞ்சிக்கலாம்
Advertisement

சொத்துக்களை வாங்கவும், விற்கவும் பத்திரம் மற்றும் பட்டாவை சரி பார்க்க வேண்டியது அவசியம். பத்திரப்பதிவுக்கும், கட்டட அனுமதிக்கும் பட்டா சரியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளம் மூலம் பட்டா பெறுவதற்கான வசதியை அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் தான், சொத்துப்பதிவு செய்பவர்கள், பட்டாவிலும் பெயர் மாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். உட்பிரிவற்ற பட்டா மாற்றமா? அல்லது உட்பிரிவுடன் பட்டா மாற்றமா? என்ற தகவல்களை கொண்டு பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். ஒருவர் சொத்துக்களை வாங்கும் போதும் யாருடைய பெயரில் பட்டா உள்ளது..? என்பது போன்ற தகவல்களை பார்வையிட புதிய வசதி ஒன்றை வருவாய்த்துறை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பதிவுத்துறையால் வில்லங்க சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் சொத்துக்களுக்கான சர்வே, உட்பிரிவு எண் மற்றும் முந்தைய பத்திரப்பதிவு விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், முந்தைய பட்டா மாறுதல் தொடர்பான விவரங்களையும் வருவாய் துறை வழங்கவுள்ளது. இந்த தகவல் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டும் வருகிறது. இது மக்களுக்கு மிகவும் உதவிக்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரண்டுகளை முறையாக அமல்படுத்த மாட்டீங்களா..? இப்படி செய்தால் வழக்கை எப்படி விரைந்து முடிக்க முடியும்..?

Tags :
Advertisement