சீனாவில் தடை செய்யப்பட்ட கருப்பு கவுனி அரிசி.! என்ன காரணம் தெரியுமா.!?
பொதுவாக இதுவரை கண்டறியப்பட்ட அரிசியிலேயே மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டது கருப்பு கவுனி அரிசி தான் என்று கூறப்பட்டுள்ளது. இதில் உடலுக்கு தேவையான ஆன்டோசைன் என்ற வேதிப்பொருள் அதிகமாக இருப்பதால் இது கருமை நிறத்தில் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு வரக்கூடிய மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் மருத்துவ குணம் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள் வெள்ளை அரிசி சோறு அதிகமாக சாப்பிடக்கூடாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கருப்பு கவுனி அரிசியில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இந்த அரிசியை நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். மேலும் மன அழுத்தம், அதிகப்படியான உடல் எடை, இதய நோய், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளையும் சரி செய்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் ராஜாக்களின் அரிசி என்று அழைக்கப்படும் கருப்பு கவுனி அரிசியை அந்த காலத்தில் ராஜாக்கள் மற்றும் ராஜ குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அந்த அளவிற்கு கருப்பு கவுனி அரிசியல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் உடலில் ஏற்படுத்தும் நன்மைகளை குறித்து சாதாரண மக்கள் அறிந்து கொண்டு இதனை அவர்களும் சாப்பிட ஆரம்பித்ததால் கருப்பு கவுனி அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் சீனாவில் இதை தடை செய்து ராஜாக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனாலையே கருப்பு கவுனி அரிசிக்கு தடை செய்யப்பட்ட அரிசி என்ற பெயரும் உண்டு. உடலுக்கு தேவையான புரதம், கால்சியம், வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த கருப்பு கவுனி அரிசியை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள்.