Deputy CM | செம ட்விஸ்ட்..!! துணை முதல்வர் பதவி கேட்கும் பாமக..!! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி..!!
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் சிறிய கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கின்றன. இந்த இரு கட்சிகளும் தேமுதிக, பாமகவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இணைய 2026ஆம் ஆண்டில் துணை முதல்வர் பதவியளிக்க வேண்டும் என்று பாமக நிபந்தனை விதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக முன்னேற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிமுக தற்போது வரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. பாமகவுடன் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். ஆனால், 7 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் துணை முதல்வர் பதவி ஆகியவற்றை பாமக கேட்பதால், இழுபறி நீடிக்கிறது.