பிறந்தநாள் பரிசாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி..? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு..!!
துணை முதலமைச்சர் பதவி தொடர்பான கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு முழுவதும் சென்று திமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் சக்தியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திகழ்கிறார்.
எனவே இளைஞரணி மாநாட்டுக்குப் பிறகு அவருக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதை கருத்தில் கொண்டு பிறந்த நாள் பரிசாக உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்புகள் விரைவில் வழங்கப்படக்கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், முதல்வர் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார்.