For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா”..? எடப்பாடி பழனிசாமி ஒரே போடு..!!

Edappadi Palaniswami has said that giving the post of Deputy Chief Minister to Udhayanidhi Stalin will not be appropriate.
09:20 AM Jul 22, 2024 IST | Chella
”உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா”    எடப்பாடி பழனிசாமி ஒரே போடு
Advertisement

திமுகவில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களும், அனுபவம் மிக்க அமைச்சர்களும் இருக்கும்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது ஏற்புடையதாக இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திமுக ஆட்சியில் அம்மா உணவகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் 19 உணவகங்களை மூடிவிட்டனர். இதனால் திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எனவேதான், அம்மா உணவகத்துக்கு சென்று முதல்வர் ஆய்வு நடத்தியுள்ளார்.ச்

உதய் மின் திட்டத்தில் பல்வேறு நன்மைகள் இருந்ததால், அதில் அதிமுக அரசு கையெழுத்திட்டது. எல்லா மாநிலங்களும் கையெழுத்து போட்டுள்ளன. தமிழ்நாட்டில் 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளன. கஞ்சா, போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களைப் பற்றிப் பேசத்தேவையில்லை. ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆம்ஸ்ட்ராங் கொலையில், தானாக சரணடைந்தவரை என்கவுன்ட்டர் செய்துள்ளனர். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இதுபோன்ற வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும்.

உதயநிதிக்கு கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற தகுதி மட்டும்தான் உள்ளது. திமுகவில் பல ஆண்டுகள் உழைத்தவர்களும், அனுபவம் மிக்க அமைச்சர்களும் உள்ளனர். ஆனால், குடும்ப கட்சியான திமுகவில், அவர்களுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்காது. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

Read More : வந்துவிட்டது இன்ஸ்டன்ட் பீர் தூள்..!! தண்ணீரை சேர்த்தால் போதும் இரண்டு நிமிடத்தில் ரெடி..

Tags :
Advertisement