முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உறுதி..? அவரே சொன்ன பாயிண்டை கவனிச்சீங்களா..?

Any decision will be taken by the Chief Minister. Udayanidhi said that it was the decision of the Chief Minister.
02:15 PM Sep 18, 2024 IST | Chella
Advertisement

திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, செம்படம்பர் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

Advertisement

இந்த கூட்டம் தொடர்பாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் உரையாற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் துணை முதலமைச்சர் பதவி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த உதயநிதி, ”எந்த முடிவாக இருந்தாலும் முதல்வர் தான் எடுப்பார். முழுக்க முழுக்க அது முதல்வரின் முடிவு தான் என்று தெரிவித்துள்ளார். என்னை துணை முதல்வராக்க வேண்டும் என தொண்டர்கள் கூறுவது அவர்களின் விருப்பம். தொண்டர்களின் விருப்பத்தை தெரிவிக்கும் வகையில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசியிருந்தார். எல்லா அமைச்சர்களுமே முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது” என்று கூறினார்.

Read More : ஆதாரத்துடன் சிக்கிய ஜெயம் ரவி..!! யார் இந்த கெனிஷா..? கோவா ட்ரிப்பில் நடந்தது என்ன..? ஆர்த்தியின் கோபத்திற்கு இதுதான் காரணமா..?

Tags :
உதயநிதி ஸ்டாலின்திமுகமுதல்வர் முக.ஸ்டாலின்
Advertisement
Next Article