வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்றது..!! தமிழ்நாட்டில் சம்பவம் இருக்கு..!! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!
வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்ற நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெற்றுள்ளது. அடுத்த 3 முதல் 4 தினங்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்கம் - வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவ வாய்ப்பு உள்ளது.
இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களை பொறுத்தவரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More : பிக்பாஸ் தமிழ் சீசன் 8இல் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் இவர்கள் தான்..!! அட CWC-இல் இருந்து இவரா..?