அடர்ந்த பனிமூட்டம்!… பள்ளிகள் திறப்பு நேரம் மாற்றியமைப்பு!… சாலை போக்குவரத்து கட்டுப்பாடுகள்!... அரசு அதிரடி!
உத்தரபிரதேசத்தில் அடந்த பனிமூட்டம் நிலவிவருவதையடுத்து, பள்ளிகள் திறப்பு நேரம் மற்றும் சாலை போக்குவரத்து தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில வெளியிட்டுள்ளது.
வெப்பம் குறைந்து குளிர் கால தொடங்கியதையடுத்து, வட இந்தியாவின் பல நகரங்களில் அடர்ந்த மூடுபனி சூழ்ந்துள்ளதால், நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் பயணிக்கும் பேருந்துகளுக்கு உத்தரபிரதேச போக்குவரத்து துறை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதாவது, தற்போது நிலவும் வானிலைக்கு ஏற்ப மாநில போக்குவரத்து துறை பல்வேறு மண்டலங்களுக்கு குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மூடுபனியின் ஆபத்துகள் காரணமாக, பேருந்துகளை பெட்ரோல் பம்புகள் அல்லது எக்ஸ்பிரஸ்வேகளை ஒட்டியுள்ள காவல் நிலையங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், பனி மூட்டம் மறையும் வரை பேருந்துகளை இயக்கக் கூடாதும் என்று உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகளை எதிர் திசையில் உள்ள தாபா (உள்ளூர் உணவகங்கள்)க்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் இரவில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு வாகன எண், ஓட்டுநரின் தொடர்பு எண், கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண் போன்ற விவரங்கள் கண்டிப்பாக காட்டப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் வெப்பநிலை குறைந்து வருவதால், காசியாபாத் நிர்வாகம் பள்ளி நேரத்தை மாற்றியுள்ளது. 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பள்ளிகள் திறந்திருக்கவேண்டும் என்று மாவட்டக் கல்வி அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, டெல்லியில் இன்றும் நாளையும் இரவு மற்றும் அதிகாலையில் "அடர்ந்த முதல் மிகவும் அடர்த்தியான" மூடுபனி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.