Abortion | 18 வது வாரம் வரை கருக்கலைப்பு செய்யலாம்.!! சட்டத்தை மாற்றி அமைத்த டென்மார்க் அரசு.!!
50 ஆண்டுகளில் முதல் முறையாக சட்டப்படி கருக்கலைப்பு(Abortion) செய்வதற்கான நடைமுறைகளை தளர்த்தி இருப்பதாக டென்மார்க் அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு 12 வாரங்கள் வரை சட்டப்படி கருக்கலைப்பு செய்யலாம் என்று இருந்த சட்டத்தை மாற்றி 18 வாரங்கள் வரை கருக்கலைப்பை சட்டம் அனுமதிப்பதாக டென்மார்க் அரசு வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறது.
15 முதல் 17 வயது வரையிலான பெண்களுக்கு பெற்றோரின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்யும் வகையில் சட்டம் மாற்றப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசி இருக்கும் டென்மார்க் பாலின சமத்துவ அமைச்சர் மேரி பிஜெர்ர் தங்கள் நாடு பெண்களின் உரிமைகளை வலுப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார். அதே நேரம் உலகின் மற்ற பகுதிகளில் பெண்களின் உரிமைகள் நசுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த சட்டம் பெண்களின் சுதந்திரம் பற்றியது, தனது சொந்த உடல் மற்றும் தனது சொந்த வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை பற்றியது. இது பெண்களின் சமத்துவத்திற்கான வரலாற்று சிறப்புமிக்க நாள்," என்று அமைச்சர் மேரி பிஜெர்ர் கூறியிருக்கிறார்.
டென்மார்க் நாட்டில் இலவச கருக்கலைப்பு(Abortion) 1973 ஆம் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைய காலகட்டங்களில் கருக்கலைப்பு அறுவை சிகிச்சை மூலம் நடைபெற்றதால் 12 வது வாரத்திற்குப் பிறகு கருக்கலைப்பு செய்வது அதிக சிக்கல் மற்றும் ஆபத்தை விளைவிப்பதாக இருந்தது. எனவே நாட்டின் சட்டமும் 12 வது மாதத்திற்கு பிறகு தலைப்பு செய்வதை தடை செய்து இருந்ததாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்
50 ஆண்டுகளுக்குப் பிறகு, கருக்கலைப்பு விதிகள் காலத்திற்கு ஏற்றார் போல் மாற்ற வேண்டிய நேரம் இது எனக் கூறிய சுகாதார அமைச்சர் சோஃபி லாஹ்டே அண்டை நாடான ஸ்வீடனில் 1996 ஆம் ஆண்டு முதல் 18 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்வது சட்டமாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார் . எனினும் ஸ்வீடன் நாட்டில் கருக்கலைப்பு செய்யப்படும் எண்ணிக்கை அல்லது கருக்கலைப்பு செய்யப்படும் விதத்திலோ எந்தவித அதிகரிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
மூன்று கட்சிகளின் கூட்டணியில் அமைந்த மையா அரசாங்கம், சோசலிஸ்ட் மக்கள் கட்சி மற்றும் சிவப்பு-பச்சைக் கூட்டணி ஆகிய இரண்டு இடதுசாரிக் குழுக்களும் இந்த சட்டத்திற்கு உடன்பட்டு இருக்கிறது. மேலும் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்த புதிய சட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது பற்றிய அதிகாரப்பூர்வமான செய்தி வெளியிடப்படவில்லை. எனினும் இந்த சட்டம் ஜூன் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.