விஜயகாந்தின் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு..!! மாற்று இடம் இதுதான்..!!
விஜயகாந்தின் உடல் நாளை மாலை 4.35 மணிக்கு சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கேப்டன் உடல் சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வரிடம் கேப்டனின் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென குடும்பத்தார் கோரிக்கை வைத்தனர். ஆனால், ராஜாஜி ஹாலில் விஜயகாந்த் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால், அதனை விஜயகாந்த் குடும்பத்தார் நிராகரித்துவிட்டனர். இதையடுத்து, நாளை மாலை 4.35 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.