தமிழகத்தை அலறவிடும் டெங்கு!. 15 நாளில் 1000 பேர் பாதிப்பு!. நடப்பாண்டில் 5700க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
Dengue: தமிழகத்தை அச்சுறுத்திவரும் டெங்கு காய்ச்சலால் கடந்த, 15 நாட்களில், 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நடப்பாண்டில் மட்டும் 5700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில், தினசரி, 100க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நம் எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, தேனி, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலுாரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவி வருகிறது. அந்தவகையில், கடந்த, 15 நாட்களில், 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது, இந்தாண்டில் இதுவரை, 5,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்; இரண்டு பேர் உயிரிழந்து உள்ளனர்.
டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சுற்றுப்புறத்தை பாதுகாத்தல், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவை அவசியம். காய்ச்சல் பாதிப்பு இருந்தால், தாமதிக்காமல் டாக்டரிடம் பரிசோதித்து, உரிய சிகிச்சை பெற வேண்டும்; சுயமாக மருந்துகளை உட்கொள்வதால், வீரியம் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்த தவறை மட்டும் யாரும் செய்ய வேண்டாம்.
Readmore: காதில் கட்டுடன் டொனால்ட் டிரம்ப்!. துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குபின் மீண்டும் பிரச்சாரம்!.