தமிழ்நாட்டு மக்களை பீதியடைய வைக்கும் டெங்கு..!! எச்சரிக்கும் பொது சுகாதாரத்துறை..!!
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது தொடர்பாக அரசு சார்பில் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பருவமற்ற காலங்களில் பெய்யும் மழையால் ஆங்காங்கே தேங்கும் நீரில் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. பகல் நேரத்தில் கடிக்கும் இந்த கொசுக்கள்தான் டெங்கு காய்ச்சலுக்கு காரணமாக அமைகிறது.
இந்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, கடுமையான மூட்டு மற்றும் தசை வலி, சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டு காலநிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 4,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடந்த 3 நாட்களில் மட்டும் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : மாணவர்களுக்கு ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை கிடைக்கும்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரம் உள்ளே..!!